நடிகர் ராம்சனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் ராம் சரணுக்குவில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் பஹத் பாசில் கமலுக்கு வில்லனாக விக்ரம் படத்திலும், அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…
சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல,…
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு…
சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம்…