ராம் சரணுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.??

Default Image

நடிகர் ராம்சனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் ராம் சரணுக்குவில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது நடிகர் பஹத் பாசில் கமலுக்கு வில்லனாக விக்ரம் படத்திலும், அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்