சிம்புவிற்கு வில்லனாகும் பஹத் பாசில்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் தற்போது, பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு கோகுல் இயக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க ஃபஹத் பாசிலிடம் படக்குழு பேசுச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025