நடிகர் பிரபாஸ் தனது நீண்டகால ஜிம் டிரெய்னருக்கு ரூ. 73 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியுள்ளார்.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து நாக் அர்ஜுன் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.
மேலும் அவர் ஓம் ராவத் இயக்கத்தில் “AdiPurush” என்னும் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் பிரபாஸ்க்கு நீண்ட காலமாக ஜிம் டிரெய்னராக இருக்கும் லஷ்மண் ரெட்டிக்கு ரூ. 73.30 லட்சம் மதிப்புள்ள Range rover velar SUV என்ற காரினை பரிசாக அளித்துள்ளார். பிரபாஸ் அவர்களின் ஜிம் டிரெய்னரான லஷ்மண் 2010ல் ஆணழகன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. லஷ்மண் குடும்பத்துடன் அன்பளிப்பு அளித்த காருடன் பிரபாஸ் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட பிரபாஸ் காசிபள்ளி ரிசர்வ் வனத்தின் 1650 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக 2 கோடி ரூபாய் நிதியுதவியை வன அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…