உயரபோகும் 50 பொருட்களுக்கான இறக்குமதி வரி…தோடு To சார்ஜர்கள் வரை விலை எகிர வாய்ப்புபட்ஜெட் பரப்பு தகவல்
- மத்திய பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படுகிறது.
- 50 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நடப்பாண்டின் மத்திய பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்நிலையில், 50 பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மின்னணு சாதனங்கள் மற்றும் மின்சார சாதனங்கள் , ரசாயனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்கள் சீனா மற்றும் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.இதில் 50 வகையான பொருட்களுக்கு சுங்க வரி 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது.
உயர்த்தப்பட்டால் அரசுக்கு இதன் மூலமாக சுமார் 56 பில்லியன் டாலருக்கு வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்பட்டால் செல்போன் சார்ஜர்கள் மற்றும் அணிகலன்கள் போன்ற பொருட்களின் விலை உயரக்கூடும் என்று கணிக்கின்றனர்.