விளக்கு தானாக அணைந்து விட்டால் கெட்ட சகுனமா !
நாம் வீடுகளில் விளக்கு ஏற்றி பட்டால் நமக்கு மனஅமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். எப்போதும் வீட்டில் மங்களம் நிறைந்து இருக்கும். தினமும் நாம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறோம்.
அந்த விளக்கு சில சமயங்களில் தீடீரென அணைந்து விட்டால் அதை நாம் கெட்ட சகுனமாக நினைத்து புலம்பி தவித்து வருகிறோம்.விளக்கு சில சமயங்களில் காற்றினால் அணைந்து விட கூடும். மேலும் திரி சரியில்லாமல் கூட சில சமயங்களில் அணைந்து விடும்.சில நேரங்களில் நாம் கவனிக்காமல் இருந்தால் எண்ணெய் இல்லாமல் கூட நின்று விடும்.
இவ்வாறு நாம் விளக்கு அணைந்து விட்டால் அதை கெட்ட சகுனமாக நினைத்து கவலை பட்டு பதறிவிடுகிறோம். மேலும் இது குறித்து யோசிக்காமல் மன நிம்மதியை அடைய அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று நமது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு வருவது மிகவும் நல்லது.