தலைவர் 169 திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 169- திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது சமூகக வலைதளத்தில் செய்திகள் கசிந்து கொண்டு வருகிறது .அந்த வகையில் தற்போது கிடைத்த தகவலின் படி தலைவர் 169 திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
நீண்ட ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது ரஜினியின் 169-வது படத்தில் வடிவேலு நடிப்பதாக பரவும் செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே ரஜினியின் வள்ளி, குசேலன், முத்து, சந்திரமுகி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…