மீண்டும் மைக்கேல் ஜாக்சன்.! குழப்பத்தில் ரசிகர்கள் டிஎன்ஏ சோதனை செய்ய வலியுறுத்தல்.!

Default Image
  • பார்சிலோனாவில் பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ் என்பவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக அப்படியே இருக்கிறார்.
  • செர்ஜியோ கோர்டெஸ் என்பவர் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 

பார்சிலோனாவில் பாப் பாடல் மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதாலும், முகத்தில் பல முறை அறுவை சிகிச்சை செய்ததாலும், அவர் உயிரிழந்தார். ஆனால் அவரது உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்த இளைஞர் ஒருவர், தற்போது பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ் என்பவர் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக அப்படியே இருக்கிறார். இவர் உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்துடன் இருக்கும் இவர் தற்போது அனைத்து இடங்களிலும் புகழ்பெற்று வருகிறார்.

மேலும் சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம். எனது இசை நிகழ்ச்சியை பாருங்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும், ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். இதனால் செர்ஜியோ கோர்டெஸ் என்பவர் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி செர்ஜியோ கோர்டெஸ் கூறும்போது, என்னை பார்த்த ஒரு பத்திரிகையாளர், நான் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் இருப்பதாக சொன்னார். என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப் போட்டு அவரது பத்திரிக்கையில் வெளியிட விரும்பினார். பின்னர் நான் அதை வேடிக்கையாக செய்தேன். மேலும் அவர் என்னை சில சுவிஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் எனது புகைப்படத்தை வாசனை திரவிய விற்பனைக்கு பயன்படுத்த விரும்பினர். இது எல்லாம் எனது அன்றாட வாழ்க்கையில் தற்செயலாக நடந்தது என்றார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்