ஜப்பானில் உருவாக்கப்பட்ட குழந்தை ரோபோ – எதற்கு தெரியுமா?
சிகிச்சையின்போது குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோ.
ஜப்பானில் குழந்தைகளுக்கான பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக பிரதேக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கண்களை உருட்டிக்கொண்டு குழந்தைகளை போலவே அழும் இந்த ரோபோவிற்கு Pedia Roid என பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பல் சிகிச்சை அளிக்கப்படும்போது, அவர்களிடம் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
குறிப்பாக சிகிச்சையின்போது வலிப்பும் மற்றும் இதய செயலிழப்பு ஆகுவதை குறித்தும் இந்த ரோபோ கண்டறிந்து வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளை எவ்வாறு கையாளுவது என்பதை பயிற்சி பெறும் மருத்துவர்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம் என ரோபோவை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குழந்தை ரோபோவின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.