ப்ரூஸ் லீயாக மாறிய..!! 8 வயது சிறுவனின் சாகசம்..!!
ஜப்பானில் ப்ரூஸ் லீயின் குட்டி ரசிகர் ஒருவர் அவரைப் போன்றே சாகசம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஜப்பானில் வசிக்கும் 8 வயதே ஆன ரியுசெய் (Ryusei) எனும் சிறுவன், ப்ரூஸ் லீயின் வீடியோக்களைப் பார்த்து அவரது ரசிகரானவர். தமது 4-வது வயதில் புரூஸ்லீ போன்றே ஆக வேண்டும் என தமது தந்தையிடம் பயிற்சி பெற்ற அவர், 8 வயதில் குட்டி ப்ரூஸ் லீயைப் போன்றே மாறி வருகிறார். தினமும் அதிகாலை உடற் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ள சிறுவன், புரூஸ்லீ போன்றே நன்சக்ஸ் (Nunchuks) பயன்படுத்தி வித்தை காட்டுகிறார். என்டர் த ட்ரேகன் படத்தின் பிரபலமான சண்டைக் காட்சியை அவ்வாறே செய்து அசத்துகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்