மைனே தீவில் 90 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை..!

அமெரிக்காவில் உள்ள மைனே தீவில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அசேலியா என பெயரிடப்பட்டுள்ளது. ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்ட் கிரே ஆகியோருக்கு பிறந்த ஆறாவது குழந்தை ஆகும்.
இந்தக் குழந்தையின் பெற்றோர் மைனே கடற்கரையிலிருந்து மிகப் பெரிய தீவான மௌண்ட் தீவுக்குச் செல்ல திட்டமிட்டு அங்கே குழந்தை பெற்றுக்கொள்ள திட்டம் செய்துள்ளனர். அதன்படி கடந்த செப்டம்பர் 26-ம் தேதி மைனே தீவில் குழந்தை பிறந்துள்ளது.
அந்த மைனே தீவில் கடந்த 1927ஆம் ஆண்டில் தான் கடைசியாக குழந்தை பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. மைனே தீவில் கடைசியாகப் பிறந்த அந்த நபர் கடந்த 2005-ம் ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.