என்னுடைய ரோல் மாடல் விராத்கோலி தான்! பாக்.பாபர் அசாம் …
பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி அணியின் துணை கேப்டனான இளம் வீரர் பாபர் அசாம், கடந்த 2015ஆம் ஆண்டு அந்த அணியில் இடம்பிடித்த இவர் குறைந்த போட்டிகளில் பங்கேற்று அதிக ரன் சராசரியை பெற்று அந்த அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.
இவரின் பேட்டிங் திறனை கண்டு வியந்த பாகிஸ்தான் அணி பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் அவரை பாகிஸ்தானின் கோஹ்லி என வர்ணித்தார்.
எனினும், 23 வயதான பாபர் உலகின் நம்பர்.1 வீரரான கோஹ்லி போன்று தான் ஒரு பெரிய வீரர் அல்ல என்றும், அவருடன் ஒப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் கூறினார்.
36 ஒருநாள் போட்டிகளில் 58.6 சராசரி மற்றும், 14 டி-20 போட்டிகளில் பங்கேற்று 46.8 ரன்களை சராசரியாக கொண்டிருக்கும் பாபர் பாகிஸ்தான் அணியின் கவனிக்கத்தக்க வீரர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் ESPN இணையதளத்திற்கு பாபர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியை முன்மாதிரியாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறு வயதில் ஹசிம் ஆம்லா, டி-வில்லியர்ஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் ஆட்டத்தை டிவியில் கண்டு ரசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் அணி வீரர் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியை போற்றிப் பேசியுள்ளது இந்திய ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com