திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராணா டக்குபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது.அதன் பின் தற்போது திர்ஷ்யம் -2 படத்தினை தெலுங்கில் ஜீத்து ஜோசப் ரீமேக் செய்து வருகிறார்.அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் நடந்து வருவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதன் ரீமேக் உரிமையை நடிகை ஸ்ரீபிரியா வாங்கி தயாரித்து வருகிறார்.
வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராணா டக்குபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மலையாளத்தில் திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் ஐஜி கதாபாத்திரம் ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டிருந்ததும்,அதில் நடிகர் முரளிகோபி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…