வரலாற்றில் இன்று(16.03.2020)… குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா மறைந்த தினம் இன்று…

Published by
Kaliraj

பிறப்பு:

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  ராயவரம் என்ற சிறுகிராமத்தில் அழகப்ப செட்டியார்-திருமதி உமையாள் ஆச்சி ஆகியோருக்கு மகனாக அழ.வள்ளியப்பா 1922ம் ஆண்டு நவம்பர் மாதம்  7ம்தேதி பிறந்தார்.

கல்வி:

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் உள்ள எஸ்.கே.டி.காந்தி துவக்கப்பள்ளியில் தனது ஆரம்ப  படிப்பைத் துவக்கினார். பின், ராயவரத்திலிருந்து 4கி.மீ தூரத்திலுள்ள கடியபட்டி பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப்பள்ளியில் தனது உயர் நிலைக் கல்வியை பயின்றார். இந்த 4கி.மீ தூரத்தியும் நடந்தே சென்று கல்விகற்று வந்தார்.

Image result for அழ வள்ளியப்பாImage result for அழ வள்ளியப்பா

  இவ்வாறு நடந்து செல்லும்போது ஒருநாள் அழகான பாடல் ஒன்றை சிறுவன் வள்ளியப்பா இயற்றினார். சகமாணவர்களிடம் அந்த எளிய பாடலைச் சொல்ல, அவர்களூம் உற்சாகமாக அதைப் பாட்டாகப் பாடியவாறே பள்ளிக்கு வந்தனர். இப்படி பாடிக்கொண்டே வந்ததில் தூரம் குறைந்து போனதாக உணர்ந்தனர் அனைவரும்!. பாடல்களில் எளியசொற்களைப் பயன்படுத்துவது முக்கியம் என்பதை அந்தப் பிராயத்திலேயே உணர்ந்த வள்ளியப்பா தனது வாழ்நாளில் கடைசிவரை இயற்றிய பாடல்களில் இதைக் கடைப்பிடித்தார்.

வழிகாட்டிய தெய்வங்கள்:
இவரை  வளர்த்தெடுக்க பேரா.மதுரை முதலியார், திரு.இளவழகனார் மற்றும் இராசமாணிக்கனார் போன்றோரை அணுகி தம் பாட்டெழுதும் தாகத்தை வெளிப்படுத்த இந்த ஆன்றோர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டினர்!.  பின் கல்வி என்பது காணல் நீரானது.  அதனால் தன் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையை 400 கி.மீ. பயணித்து சென்னை நகரில் வேலை கிடைக்க அவர் பெற்ற மதிப்பெண்கள் துணையாக இருந்தது!
சக்தி காரியாலயம் என்ற நிறுவனத்தில் காசாளராக முதன்முதலில் சேர்ந்தார். வேலையில் சேர்ந்துவிட்டாலும் தனது அபிலாசையான பாடல் புனைவதையும் இணையாக வளர்த்து வந்தார். கொஞ்ச காலம் கழித்து, 1941ல் இந்தியன் வங்கியில் எழுத்தராக இணைந்துகொண்டார்!
மணவாழ்க்கை:
திருமதி.வள்ளியம்மை ஆச்சி 1944ம் ஆண்டு பிப்.4ம்தேதி இவருடைய வாழ்க்கையில் இணைந்த பொன்னான நாளாகும்! பின், அலமேலு, அழகப்பன், கஸ்தூரி, உமையாள் மற்றும் தெய்வானை என்று அய்ந்து குழந்தைகளோடு இல்லம் நிரம்பியிருந்த நேரத்தில் குடும்பப் பொறுப்பை தன் தோளில் ஏற்றிக்கொண்டு குழந்தைகளுக்கான இலக்கியப் பணியை தம் கணவர் மேற்கொள்ள ஏதுவாக ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தார்!

பாடல் புனைதல்:

1944-54 ஆண்டுகளில் தம்மை முழுமையாக குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளில் ஈடுபடுத்திக்கொண்டார்! “பால மலர்”, “டமாரம்”, “சங்கு”, மற்றும் “பூஞ்சோலை”, ஆகிய சிறுவர் இதழ்கலுக்கான கெளரவ ஆசிரியராகப் பணியாற்றினார்.
மறைவு:
திடீரென்று 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் நாள் வரை தமது வாழ்நாளைக் குழந்தைகளுக்கான இலக்கியத்துக்காகவே பணியாற்றி மறைந்தார். இத்தகைய குழந்தை கவிஞர் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

29 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

40 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

58 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago