அய்யப்பனும் கோஷியும் படத்தின் புதிய அப்டேட்.!
தனது படமான அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிப்பதே எனது விருப்பம் என்று சச்சி கூறியுள்ளார்.
சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். இந்த படம் மலையாள சினிமாவை இந்திய அளவில் திரும்பி பார்க்க செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குனரான சச்சி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருச்சூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.அதனையடுத்து 48 வயதான இவர் நேற்றைய முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சமீபத்தில் தான் இவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. இது மலையாள சினிமாயுலகை மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாயுலகில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சச்சிக்கு பெருமையை தேடி தந்த அய்யப்பனும் கோஷியும் படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகவும், அதனை வெற்றி படமான ஜிகர்தண்டா படத்தை தயாரித்த ஃபை ஸ்டார் கதிரேசன் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் சசிகுமார் மற்றும் தமிழின் முன்னணி நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குநர் சச்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழில் ரீமேக் செய்யப்படும் அய்யப்பனும் கோஷியும் படத்தில் இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார். ஆம் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் கார்த்தி அவர்களையும், பிஜூ மேனன் நடித்த கதாபாத்திரத்தில் பார்த்திபன் அவர்களும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.இந்த செய்தியை அறிந்த பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, அய்யப்பனும் கோஷியும் பிஜூ மேனன் பாத்திரம் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள், இயக்குனரே சொல்லியிருக்கிறார். மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைக்குலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன். அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன். மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் சச்சியின் விருப்பம் நடக்குமா என்று விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அய்யப்பனும் கௌஷியும்’பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன்.அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம் pic.twitter.com/9eWchtLte4
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 19, 2020