SK பிறந்த நாள் பரிசாக …. இசைப்புயல் இசையில் “அயலான்” ஃபர்ஸ்ட் சிங்கிள்..!

சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 17 ஆம் தேதி அயலான் திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து டி.முத்துராஜ் இசையமைக்கிறார் . பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் 2500 கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து வருகின்ற 17 ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அயலான் திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிடவுள்ளதாக படத்தின் இயக்குனர் ரவிக்குமார் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
@Siva_Kartikeyan பிறந்த நாளில் அனைவருக்கும் ஒரு இசைப்பரிசு❤️#AyalaanFirstSingle dropping on 17th Feb!
An @arrahman musical ????@kjr_studios @24AMSTUDIOS @Rakulpreet #NiravShah @sonymusicsouth pic.twitter.com/SGGjsAvxcB— Ravikumar R (@Ravikumar_Dir) February 15, 2021