வலிமை படத்தின் அட்டகாசமான அப்டேட்… காத்திருக்கும் தல ரசிகர்கள்..!
அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 99% முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை .எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது . அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.
பைக் ரேஸ் காட்சிகளும், ஸ்டண்ட், காட்சிகளும் அதிகமுள்ள வலிமை படத்திலிருந்து ஏற்கனவே தல அஜித் பைக் ரேஸ் செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் நேற்று வலிமை படத்தில் அஜித் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 99% விகிதம் முடிந்து விட்டதாகவும் இந்த மாத இறுதிக்குள் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.