பொதுவாக சில பேரின் முகத்தில் குழிகள் அதிகமாக காணப்படும். அப்படி முகத்தில் குழி உள்ளவர்களின் முகத்தில் அதிக எண்ணெய் வழிவதோடு மட்டுமல்லாமல் அழுக்குகளும் அதிகம் சேரும்.
அப்படி முகத்தில் அழுக்குகள் சேர்வதால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் முகத்தில் உள்ள குழிகளை போக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
குறிப்பு:
நன்றாக கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவிய பின்னர் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
தக்காளியை நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ,பின்னர் ஊற வைத்து அதன் பின் முகத்தை கழுவ வேண்டும்.
இரவில் பாதாமை படுக்கும்போது பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த பாதாமை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும். பின்னர் அதை முகத்தில் தடவி உலர வைத்து முகத்தை கழுவ வேண்டும்.
முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை முகத்தில் தடவி, பின்னர் அதை உலர வைத்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். அப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள குழிகள் மறையும்.