கோவைக்காயின் வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள் !!!!!!!!!!

Default Image

பழங்காலத்திலேயே நீரழிவு நோய்க்கு பயன்படுத்தி வரும் காய்கறிகளில்  ஒன்று ஆகும் .இது கிராம புறங்களில் சாதாரணமாக முற்புதர்களில் கிடைக்கும்  எளிமையான காய்கறி.இது கொடியினத்தை சேர்ந்தது .இது வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. இதன் இல்லை காய்,கனி அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது .இதனால் கோவைக்காயை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர்.
கோவைக்காய் பயன்கள் :
இது இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் .தோல் நோய்களை குணப்படுத்தும்.இதனை  வாரத்திற்கு இரு முறை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.பித்தம், இரத்தப்பெருக்கு, வாயுத்தொல்லை,வயிற்றுப்புண் ஆகிய வற்றிற்க்கு மருந்தாகும் .கோவைக்காயில் இருக்கும் பாக்டீரியா  எதிர்ப்புத்தன்மை காரணமாக இது பல ஆயுர்வேதம் மருந்துகளில் பயன்படுகிறது கோவைக்காயை அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகிறது .
Image result for சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
கோவைக்காயில் வைட்டமின் எ ,கால்சியம், பாஸ்பரஸ் ,முதலிய சத்துக்கள் அதிகம்  காணப்படுவதால் இது நமது உடலுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது .கோவைக்காயை தொடர்ந்து எடுத்து கொள்வதால் ஆரம்ப நிலையில் இருக்கும் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
மேலும் இதனை சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி மோரில் போட்டு சாப்பிட்டால் சிறுநீர் கழிக்கும் பொழுது  ஏற்படும் எரிச்சலை தவிர்க்கும் .தேவையற்ற உண்ணவோ பழக்கத்தால் ஏற்படும் சூட்டை தடுக்க கோவைக்காயை மோரில் போட்டு அதனுடன் சீரகத்தூள் ,மீளகுத்தூள் ,இஞ்சி , உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
Image result for கோவைக்காயை
சொரி சிரங்கு ,பிரச்சனை தீர கோவைக்காய் இலையை அரைத்து அதன்  சாற்றை சொறி ,சிரங்கு,படை  இருக்கும் இடத்தில்  போட்டால் மிகவும் நல்லது .
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்