ராக் ஸ்டார் இசையில் வெளியாகவிருக்கும் “ரெண்டு காதல்” பாடல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.
விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர் .
கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்த படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் காதலர் தினமான இன்று வெளியாகவுள்ளதால் அனைவரும் காத்துள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025