2 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற “ரெண்டு காதல்” பாடல்..!
அனிருத் இசையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து வெளியான ரெண்டு காதல் பாடல் யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர் .
கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்த இந்த படத்தில் இடம்பெற்ற “ரெண்டு காதல்” பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான மிகவும் இனிமையான இசையுடன் மென்மையான குரலுடன் வெளியான இந்த பாடல் யூடியூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.