இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசியின் தலைநகரான பாலுவில் உள்ள ஒரு ஓடும் ஆற்றில் ஒரு முதலை மூன்று ஆண்டுகளாக ஒரு மோட்டார் சைக்கிள் டயரை அதன் கழுத்தில் சுமந்து கொண்டு உள்ளது.3 ஆண்டுகளுக்கு முன்னர் யரோ ஒருவர் வீசிய மோட்டார் சைக்கிளின் டயர் 13 அடி நீளம் கொண்ட சியாமி என்ற முதலையின் கழுத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால் முதலை உணவை வேட்டையாடி சாப்பிட்டாலும் அதன் தொண்டைப் பகுதியில் உள்ள டயர் இறுக்கமாக இருப்பதால் சியாமி முதலையால் சரியாக உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சியாமி முதலை பட்டினியால் வாடி வருகிறது.
முதலையின் தொண்டை பகுதியில் உள்ள டயரை நீக்க வனத்துறை அதிகாரிகள் பல முயற்சிகள் செய்தும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. விரைவில் டயரை முதலையின் கழுத்தில் இருந்து அகற்றப்படாவிட்டால் டயர் முதலை கழுத்தை நெரிக்கும் என பாதுகாவலர்கள் கவலை கொண்டுள்ளனர்.முதலையின் தொண்டை பகுதியில் இருந்து டயரை நீக்க அதிகாரிகள் தொடந்து முயற்சிகள் செய்து வருகின்றனர்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…