ஆஸ்திரேலியாவில் விருதுகளை குவிக்கும் சூரரைப்போற்று.! சிறந்த நடிகராக சூர்யா.!
மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் என இரு விருதுகளை வென்றது சூரரைப் போற்று திரைப்படம்.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் சூரரைப் போற்று திரைப்படமும் மற்றும் சிறந்த நடிகர் சூர்யா என இரு விருதுகளைத் வென்றுள்ளது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.