மனிதநேயத்தை பாராட்டி சோனு சூட்டிற்கு வழங்கப்பட்ட விருது .!குவியும் வாழ்த்துக்கள்.!

Default Image

சோனு சூட்டின் மனிதநேயத்தை பாராட்டி அவருக்கு “சஸ்டைனபிள் டெவலப்மென்ட் கோல்ஸ்” விருதினை ஐ.நா சபை வழங்கியுள்ளது.

சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி ஒருவருக்கு டிராக்டர் உள்ளிட்ட பல உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.இவரது மனித நேயத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சோனு சூட் அவர்களை கௌரவிக்கும் விதமாக அவரது மனித நேயத்தை பாராட்டி “சஸ்டைனபிள் டெவலப்மென்ட் கோல்ஸ்” விருதினை ஐ.நா சபை வழங்கியுள்ளது .அது மட்டுமின்றி சோனு சூட்டின் பெயரை ஆந்திராவில் உள்ள சரத்சந்திரா கல்லூரியில் உள்ள ஒரு துறைக்கு சூட்டி கௌரவித்துள்ளனர் .இதனால் சோனு சூட்டிற்கு பலர் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

soonusood

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்