கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 ஆப்கள் மூலம் உங்கள் தகவல் கசிய வாய்ப்பு உள்ளதாக அவாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 க்கும் மேற்பட்ட ஆப்கள்(apps) ஆபத்தானது என்று டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆப்கள் உங்கள் இருப்பிடம்,கடவுச்சொல் (password) உள்ளிட்ட தனிப்பட்ட தரவு கசிவு மற்றும் உங்கள் ஃபோனின் பாதுகாப்பை பாதிக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் படி,19,300 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்களின் ஃபயர்பேஸ் தரவில் ஒரு முக்கியமான தவறான பிரதிபலிப்பு காரணமாக பெரும்பாலான பயன்பாடுகள் பாதிக்கப்படுவதாக டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.ஃபயர்பேஸ் (Firebase) என்பது பயனர் தரவை சேமிப்பதற்காக ஆண்ட்ராய்டு டெவலப்பர்களால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்.
இந்த சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஆப்கள் பெரும்பாலும் வாழ்க்கை முறை(lifestyle), கேமிங், உணவு விநியோகம் மற்றும் மின்னஞ்சலுடன் தொடர்புடையவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐரோப்பாவில் உள்ள பயனர்கள், தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நிறுவனம் கூறுகிறது .
1,80,300 க்கும் மேற்பட்டவர்களில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஆப்கள் மூலம் கிடைக்கக்கூடிய ஃபயர்பேஸ் நிகழ்வுகள் ஆய்வாளர்களால் ஆராயப்படுவதாக கண்டறியப்பட்டனர், அதாவது ஆப்கள் மூலம் பயனர்களின் தரவு லீக் செய்யப்படும் என்பதாகும்.
மேலும்,இது தொடர்பாக தீம்பொருள் ஆராய்ச்சியாளர் விளாடிமிர் மராகோவ் கூறுகையில்:”இந்த திறந்த நிகழ்வுகளில் ஒவ்வொன்றும் ஒரு தரவு மீறல் நிகழ்வு ஆகும், அது நடக்க காத்திருக்கும் மற்றும் நடந்தால்,
இது முக்கியமான வணிக, சட்ட மற்றும் ஒழுங்குமுறை அபாயங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக,ஃபயர்பேஸ் அடிப்படையிலான பயன்பாடுகளில் 10 சதவிகிதத்திற்கும் மேலானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருக்கக்கூடும்”,என்று எச்சரித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…