கொரோனா எதிரொலி ஹோண்டா நிறுவனம் முக்கிய அறிவிப்பு….
இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஹோண்டா நிறுவன ஆலையில் பணிகள் மார்ச் 22 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், சிக்கலான காலக்கட்டத்தில் தனது வியாபார ஒப்பந்ததாரர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
மேலும், வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவடைந்த வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹோண்டா இந்தியா பவுன்டேஷன் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நிவாரண நிதியாக ரூ. 11 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் அதிக காற்றழுத்தம் கொண்ட 2000 பேக்பேக் ஸ்பிரேயர்களை வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.