வாடிக்கையாளர்களின் வாழ்வை வசந்தமாக்க இனிதே சந்தையில் இறங்கியது வால்வோ s80 பிரீமியம்…
- சுவீடன் நாட்டு நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் இறக்கியது தனது புதிய மாடலை.
- மற்ற கார்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கணிப்பு.
சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனம் சந்தையில் சொகுசு கார் மற்றும் பஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. வால்வோ தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் இந்திய கார் சந்தையின் நிலவரத்திற்கு ஏற்றவாறு புதிய மாடல்களை வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில், அனைத்து அம்சங்களுடன் கூடிய S80 பிரிமியம் சொகுசு காரை வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய S80 கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இதில்,
- குரூஸ் கன்ட்ரோல்,
- ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன.
- இதன் பெட்ரோல் எஞ்சின் 304hp திறனையும்,
- டீசல் எஞ்சின் 205hp திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
- 18 இஞ்ச் கொண்ட அகலமான வீல் மற்றும்
- முகப்பு விளக்குகள் ஆகியவை இதன் அழகுக்கு அழகு சேர்க்கிறது.
இந்திய சந்தையில் புதிதாக வந்து இறங்கிய ஆடி A4,மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு வால்வோவின் S80 பிரிமியம் சொகுசு கார் நிச்சயம் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.