சந்தையில் கலைகட்டும் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள்.. அமோகமாக விற்பனையாகி அசத்தல்..
- இருசக்கர வாகனங்களின் இராஜா டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் அமோகம்
- அதிகமான விற்பனையாகி சதனை.
இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் தனி முத்திரை பதித்து வருவது டிவிஎஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது புதிதாக டிவிஎஸ் என்டார்க் 125 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விற்பனையும் தற்போது அமோகமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் புளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. கடந்த 2019, நவம்பர் மாதத்தில் மட்டும் 27,390 டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. ஆனால் 2018ம் ஆண்டு, நவம்பரில் 20,715 டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. அதாவது இப்போது 6,675 யூனிட்கள் கூடுதலாக டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது விற்பனை சுமார் 32 சதவீதம் கூடுதல் ஆகும். சுருக்கமாக சொன்னால் ஒட்டுமொத்தமாக 4 லட்சம் யூனிட்கள் என்ற இலக்கை சமீபத்தில் தான் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் எட்டியது. இந்த டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் 124.8 சிசி திறன் கொண்டது. மேலும் இதில், சிங்கிள் சிலிண்டர் பிஎஸ்-4 இன்ஜின் அதிகபட்சமாக 9.4 எச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் இந்த டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் வழங்கும். என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியன்ட் ரூ. 59,512. டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூ. 60,595. ரேஸ் எடிஷன் மாடல் ரூ. 63,475(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை).டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் வருகையால் வாகன சந்தையில் நல்ல போட்டியையும் விற்பனையையும் பெற்றுள்ளது.