இந்தியாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, GST வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, BOSCH இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பெரும் பகுதி உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. இந்தியாவில் நடப்பு ஆண்டு கார் விற்பனை 8.77% சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், பிப்ரவரி மாதம் நாடுமுழுவதும் 2,51,516 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அதாவது கார் விற்பனையை பொறுத்தவரையில் 8.77 சதவீத வீழ்ச்சியுடன் 1,56,285 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை : இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியில் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நபர்கள்…
சென்னை : தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
சென்னை : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார்…
சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய…
டெல்லி : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை…