வாட்ஸ்அப்பில் காணாமல் போகும் செய்திகள் என்ற அம்சம் 90 நாட்களுக்கு நீட்டிக்க சோதனை நடைபெற்று வருகிறது.
பிரபல சமூக ஊடகமான வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில்,வாட்ஸ்அப் காணாமல் போகும் செய்திகள் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது,அது குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகளை தானாகவே நீக்குகிறது.
இந்நிலையில்,வாட்ஸ்அப்பில் காணாமல் போகும் செய்திகள் என்ற அம்சம் 90 நாட்களுக்கு நீட்டிக்க சோதனை நடைபெற்று வருகிறது. வாட்ஸ்அப் மூலம் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டம், காணாமல் போகும் செய்திகள் 90 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகும் என்று வாட்ஸ்அப் பீட்டா அம்ச கண்காணிப்பு இணையதளம் WABetaInfo அறிக்கை தெரிவிக்கிறது.அதன்படி ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.21.17.16 க்கான வாட்ஸ்அப்பானது 90 நாட்களுக்குப் பிறகு செய்திகளை மறைக்கும் அம்சத்தைக் கொண்டுள்ளது.
முன்னதாக,இந்த மாத தொடக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை “ஒருமுறை பார்க்கவும்” என்ற அம்சத்தையும் அறிமுகம் செய்தது.
வாட்ஸ்அப்பில் காணாமல் போகும் செய்திகள் அம்சத்தை எப்படி இயக்குவது?
ஸ்டெப் 1: உங்கள் ஆண்டிராய்டு அல்லது iOS ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் சாட்டை திறக்கவும்.
ஸ்டெப் 2: நீங்கள் அந்தத் தொடர்பின் பெயரை க்ளிக் செய்யவும்.அதன்பின்னர், “காணாமல் போகும் செய்திகள்” (Disappearing Messages) அமைப்பை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: இப்போது, On என்பதைத் தேர்ந்தெடுக்கவும். காணாமல் போகும் செய்திகளை முடக்க விரும்பினால், நீங்கள் இந்த அமைப்பிற்குத் திரும்பிச் சென்று OFF-ஐ தேர்ந்தெடுக்கலாம். க்ரூப் சாட்டில் காணாமல் போகும் செய்திகளை இயக்க இதே செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…