AUSvPAK:சதம் அடித்து சாதனை படைத்த டேவிட் வார்னர்!
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் ,டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 111 பந்தில் 11 பவுண்டரி , 1 சிக்ஸர் என மொத்தமாக 107 ரன்கள் குவித்தார்.
- இதன் மூலம் உலக்கோப்பையில் டேவிட் வார்னர் அடித்த இரண்டாவது சதமாகும்.
- ஒருநாள் போட்டிகளில் அடித்த 15 -வது சதமாகும்.
- ஒருநாள் போட்டிகளில் இவர் அடித்த 15 சதத்தில் 80 சதவீத போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து உள்ளது.