300 கோடி உயிரினங்களை கொன்ற ஆஸ்திரேலிய காட்டு தீ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
300 கோடி உயிரினங்களை கொன்ற ஆஸ்திரேலிய காட்டு தீ.
கடந்த 2019ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவில் பயங்கரமான காட்டு தீ ஏற்பட்டது. இதனால் சுமார் 1,15,000 சதுர கிலோமீட்டர் காட்டுப்பகுதி பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் 30க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வாடினர். ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுதான் மிக நீண்ட காட்டுத் தீயாக இருந்தது.
இந்நிலையில், இந்த காட்டு தீயில் ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ள தகவலில், ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் சுமார் 3 பில்லியன் ( 300 கோடி) விலங்குகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 143 மில்லியன் பாலூட்டிகள், 2.46 பில்லியன் ஊர்வன, 180 மில்லியன் பறவைகள், 51 மில்லியன் தவளைகளும் அடங்கும். இந்த கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் முடிவடையவில்லை என கூறுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)