இலங்கை அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணி

நேற்றைய போட்டியில் இலங்கை அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்தப் போட்டியானது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
டேவிட் வார்னர் 26 ரன்கள் இருக்கும் போது தனது விக்கெட்டை இழந்தார்.பின்னர் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 10 ரன்களில் வெளியேறினார்.அடுத்ததாக இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் இருவரும் கூட்டணியில் இணைய அதிரடியாக விளையாட தொடங்கினர்.
நீண்ட நேர அதிரடிக்கு பிறகு ஆரோன் பிஞ்ச் 153 ரன்கள் அடுத்து வெளியேறினார். ஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் இவர்களின் கூட்டணியில் மட்டுமே 173 ரன்கள் சேர்த்தனர்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் குவித்தனர்.இலங்கை அணி பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா , இசுரு உதனா இருவரும் தலா இரு விக்கெட்டை பறித்தனர்.
335 ரன்கள் இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களான டிமுத் கருணாரட்ன, குசல் பெரேரா களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.குசல் பெரேரா தனது அரைசதத்தை நிறைவு செய்த சிறிது நேரத்திலே 52 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் இறங்கிய திரிமன்னே ,கருணாரட்ன உடன் இணைய சற்று அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.நிதானமாக விளையாடி கருணாரட்ன 97 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக இலங்கை அணி 45.5 ஓவரில் 247 ரன்கள் எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025