தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 308 ரன்கள் இலக்காக வைத்த ஆஸ்திரேலியா
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் ,
டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் , நிதானமாகவும் விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இவர்கள் கூட்டணியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.அப்போது ஆஸ்திரேலியா தங்களது முதல் விக்கெட்டை 146 ரன்னில் இழந்தது.இதன் மூலம் ஆரோன் பிஞ்ச் 82 ரன்னில் வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய ஸ்மித் 10 ரன்களுடன் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி தனது சதத்தை நிறைவு செய்தார்.பின்னர் களமிறங்கிய க்ளென் மாக்ஸ்வெல் 20 ரன்னும், ஷான் மார்ஷ் 23 ரன்னும்,உஸ்மான் கவாஜா 18 ரன்னும் எடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 307 ரன்கள் குவித்தது.பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் முகம்மது அமீர் 5 விக்கெட்டையும் , ஷாஹீன் அஃப்ரிடி 2 பறித்தனர்.308 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.