காதலியின் பிறந்தநாளுக்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா இளைஞர் ஒருவர் ஹோட்டலில் இருந்து தப்பித்து விதிமுறைகளை மீறி வெளியே நடனமாடியதால் 6 மா த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவர்களும், கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் தென்ப்பட்டாலும் அவர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூசுஃப் என்ற இளைஞர் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
ஆனால், அவர் ஹோட்டலில் இருந்து ஏணியை பயன்படுத்தி அடிக்கடி தப்பித்து வெளியே சுற்றி திரிந்ததை அடுத்து போலீசில் ஹோட்டல் நிர்வாகத்தினர் புகார் செய்துள்ளனர். அதனையடுத்து அந்த இளைஞரை காதலியின் வீட்டில் உள்ள கபோர்டில் இருந்து கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே சுற்றி திரிந்து விதிகளை மீறியதால் இளைஞருக்கு ஆஸ்திரேலியா நீதிமன்றம் 6மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இளைஞர் அவரது காதலியின் பிறந்தநாள் என்பதால் தான் ஹோட்டலில் இருந்து தப்பித்ததாக கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…