ஆங் சான் சூகி தடுப்புக்காவல் நீட்டிப்பு …!
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை மியான்மர் ராணுவம் கைப்பற்றியுள்ளது.ஆங் சான் சூகி உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆங் சான் சூகியின் தடுப்புக்காவல் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அவருக்கு மேலும் 2 நாட்கள் தடுப்புக்காவலில் இருப்பார் என ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் சூகியை உடனடியாக விடுவிக்க கோரி தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.