அட்டகத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படத்தின் மூலம் இவரை ரசிகர்கள் அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த அளவிற்கு படத்தில் மிகவும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடித்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு புதிய திரைபடத்தை தயாரிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. விரைவில் யார் இயக்குனர் யார் யார் நடிக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள படத்தையும் தயாரிக்கவுள்ளார். நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தையும் இயக்கவுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…