பிரமாண்டமாக பாலிவுட்டில் கால்பதிக்க உள்ள அட்லீ! ஷாருக்கான் படத்தின் மாஸ் அப்டேட்!

தெறி , மெர்சல், என பிரமாண்ட வெற்றியை அடுத்து அண்மையில் தீபாவளி ஸ்பெஷலாக தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ. தமிழில் தொடர் வெற்றியை குவித்து வரும் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சங்கி என தலைப்பிடபட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு நவம்பர் 2 ( ஷாருக்கான் பிறந்தநாள் ) அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள்ளது.