வேற லெவல் டா தம்பி! -யாரை புகழ்ந்துள்ளார் பிகில் இயக்குனர் அட்லீ?

- விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 96.
- இப்படம் தெலுங்கில் சமந்தா – சர்வானந்த் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது.
தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தை பிரேம் குமார் இயக்கினார். படத்தில் ராம் – ஜானுவாக இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது.
தெலுங்கு ரீமேக்கிற்கு ஜானு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்பட டீசர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீசரை பலரும் பாராட்டி வரும் நிலையில்,
பிகில் இயக்குனர் அட்லீ இந்த டீசரை பார்த்துவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வேற லெவல் ட தம்பி. என சமந்தாவை புகழ்ந்துள்ளார். மேலும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து, டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவான தெறி, மெர்சல் ஆகிய படங்களில் சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#JaanuTeaser veralevel da thambi @Samanthaprabhu2 can’t wait to see https://t.co/E7iO00AC4X kudosss to the entire team
— atlee (@Atlee_dir) January 9, 2020