2018 தமிழக பட்ஜெட்:ரூ1789 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு- அவினாசி திட்டம்!
தமிழக பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுபற்றி கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ172 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மானியம், உதவித் தொகைக்காக ரூ75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரூ1789 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் நீர்பாசனத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தாமிரபரணி-நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நியாயவிலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.