ஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள்.! நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.! அடித்தது அதிர்ஷ்டம்.!

- ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார்.
- இத்திரைப்படத்தில் முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இசையமைப்பாளர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படம், சமீபத்தில் இந்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தைப்பெற்ற விக்கி டோனர் என்ற திரைப்படம், இது தற்போது அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் தமிழில் ரீமேக் செய்கிறார். இவர் ஏற்கனவே தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் யுத்தம் ஷரணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். தாராள பிரபு படத்தில் கதாநாயகனாக ஹரிஸ் கல்யாண், தடம் திரைப்படத்தில் அறிமுகமான டன்யா ஹோப் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் விவேக் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இதில் முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இசையமைப்பாளர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில், டோரா, வடகறி, பட்டாஸ் படங்களின் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின், ஊர்கா என்ற இசைக்குழு (இவர்கள் இதற்கு முன்னர் அமலாபால் நடித்த ஆடை திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்) மற்றும் பிரபல பாடகர் இன்னோ கேங்கா, பா.பாண்டி, மெஹெந்தி சர்க்கஸ், ஜோக்கர், வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படங்களின் இசையமைப்பாளர் சீன் ரோல்டன், ஊர்கா இசைக்குழுவின் இசையமைப்பாளர் பரத் ஷங்கர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் கபீர் வாசுகி, நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்துக்கு இசையமைத்த மட்லி ப்ளுஸ் இசைக்குழு, மற்றும் அனிருத் ஆகியோர் இத்திரைப்படத்தில் இசையமைக்கின்றனர்.
We are extremely thrilled to put this ensemble set of terrific musicians together for #DharalaPrabhuIsaiTeam. @iamviveksiva @MervinJSolomon @thisisoorka @MadleyBlues @bharathsankar12 @kabervasuki @innogenga @RSeanRoldan @anirudhofficial Thanks to everyone ☺️ pic.twitter.com/XhuAMb6gvh
— Screen Scene (@Screensceneoffl) January 22, 2020
இதற்கு முன்பு விக்ரம் நடித்த டேவிட் திரைப்படத்தில் 7 இசையமைலர்கள் இசையமைத்தனர். அதைத்தொடர்ந்து இயக்குநர் வசந்த்தின் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, திரைப்படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருந்தனர். இதுபோன்று ஹிந்தியில் சமீப காலமாக ஒரு படத்திற்கு பல இசையமைப்பாளர்கள் இசையமைத்து வருகின்றனர் என்றாலும், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தாராள பிரபு திரைப்படத்தில் தான் முதல் முறையாக 8 மியூசிக் டெரக்டர் இசையமைக்கிறார்கள். மேலும், விந்து தானம் பற்றிய திரைப்படமான விக்கி டோனர், 2012-ல் அந்த வருடத்திற்கான மத்திய அரசின் தேசிய விருதை பெற்றது. தற்போது இப்படத்தை தமிழ் உரிமையை ஸ்க்ரீன் சென் தயாரிப்பு நிறுவனம் பெற்று தயாரிக்கிறது. மேலும், மாநகரம், மெஹெந்தி சர்க்கஸ், ஜிப்சி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செல்வகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கிருபாகரன் படத்தொகுப்பு செய்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025