சீனாவின் மனித உரிமை மீறல் விவகாரம்… ஐநாவில் 39 நாடுகள் கடும் கண்டனம்….

Published by
kavitha

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து, ஐ.நா.,வில், 39 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் பொது சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட, 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையை, ஐக்கிய நாடுகளுக்கான ஜெர்மனியின் நிரந்தர துாதர், கிறிஸ்டோப் ஹெஸ்கன் வாசித்தார். அதில், சீனா, சிறுபான்மையினர் மீது நடத்தும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. குறிப்பாக, ஜிங்ஜியாங் மாகாணத்தில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, அரசியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சுதந்திரமாக மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், வெளியில் நடமாடு வதற்கும், ஒன்று கூடி பேசுவதற்கும், பேச்சுரிமைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது, உய்குர் கலாசாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல்.மேலும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, உய்குர் மற்றும் இதர சிறுபான்மையினரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல் கட்டாயக் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, கொத்தடிமைகளாக்குவது போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஏராளமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதேபோல, திபெத்திலும், சிறுபான்மையினருக்கு எதிராக, சீனா மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளது. இது, பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இத்தகைய மனித உரிமை மீறல்களை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் மக்களின் நிலையை நேரில் கண்டறிய, ஐ.நா., மனித உரிமைகள் குழு தலைவர், மிச்சல் பேச்லட் தலைமையிலான குழுவிற்கு, சீனா அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வாசிக்கப்பட்டதும், 55 நாடுகள் சார்பாக, சீனாவிற்கு ஆதரவான அறிக்கையை, பாக்கிஸ்தான்  வெளியிட்டது. அதில், ‘ஹாங்காங் பிரச்னை, சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், அதில் பிற நாடுகள் தலையிடக் கூடாது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும், மேற்கத்திய நாடுகளின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

Recent Posts

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்! 

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!

ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…

3 hours ago

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…

3 hours ago

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

4 hours ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

5 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

7 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

8 hours ago