ஒரே பார்வை உடல் நடுங்கி விட்டது.! அதுதான் உலகநாயகன்.! – நரேன் ஓபன் டாக்.!

Published by
பால முருகன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்” இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Kamal-Haasan-Vijay-Sethupathi-Fahadh-Faasil-look-intense-in-first-look-poster-of-Vikram-2

இந்த நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நரேன் சமீபத்திய பேட்டியில் விக்ரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கமல் சாரை பார்த்து தான் சினமா நடிக்கணும் என்று ஆசைப்பட்டேன்..விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியான பிறகு தான் படத்தில் நடிக்கவுள்ளேன் என எனக்கு தெரிந்தது… விக்ரம் டீசர் பார்த்துவிட்டு லோகேஷ் சாருக்கு கால் செய்து..டீசர் பயங்கரமா இருக்கு சார்-னு சொன்னேன்…அதுக்கு லோகேஷ் ..சார் நீங்களும் படத்தில் இருக்கீங்க என சொன்னார்…அந்த நிமிடம் எனக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது…

சிறிய வயதில் இருந்து நான் தீவிர கமல் சார் ரசிகன்… இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்… விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் கமல்சார் என்னிடம் கேள்வி கேப்பார் அப்போது நான் அதற்கு பதிலளிக்க அவரை பார்க்கவேண்டும்…நான் அவரை பார்த்து அந்த வசனத்தை சொல்ல போறேன் கமல் சார் என்னை பார்த்தவுடன் பயந்துட்டேன்.

உடனே லோகேஷ் சார் இந்த அளவிற்கு பயந்து நடிக்க வேண்டாம்.. என கூறினார்… அதற்கு நான் அது நடிக்கல உண்மையாகவே எனக்கு பயம் வந்துவிட்டது என கூறினேன்” என்று நரேன் கூறியுள்ளார். மேலும் பேசிய நரேன் விக்ரம் படம் கமல் சாருக்கு மிக பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்! கூடுதலாக 90 ராணுவ அமைப்புகள் குவிப்பு!

இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…

1 minute ago

10, 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு எப்போது? முழு விவரம் இதோ…

சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  முதலில்…

37 minutes ago

மாணவர்களுக்கு குட் நியூஸ்! தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…

58 minutes ago

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

10 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

12 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

12 hours ago