#Shocking:துப்பாக்கிச் சூடு – 8 பேர் பலி;16 பேர் உயிரிழப்பு!

Default Image

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.பல பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி வருகின்றன.

இந்நிலையில்,கடந்த வார இறுதியில் சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும்,மேலும் 16 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த வகையில்,சிகாகோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் மைனர் மற்றும் 62 வயதான பெண் உட்பட அனைத்து வயதினரும் அடங்குவர்.பிரைட்டன் பார்க், சவுத் இந்தியானா, நார்த் கெட்ஸி அவென்யூ, ஹம்போல்ட் பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே,Gun Violence Archive என்ற ஆராய்ச்சிக் குழுவின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 140-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.தினமும் 7,500 ஆதாரங்களில் இருந்து தரவுகளை சேகரித்து வருவதாகவும், சம்பவங்களின் எண்ணிக்கை அறிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும்,அதிபர் ஜோ பைடென் நிர்வாகம் சமீபத்திய துப்பாக்கிச் சூடுகளுக்கு தீர்வு காண புதிய நடவடிக்கைகளை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்