ஈராக் தலைநகரின் தென்கிழக்கு பாக்தாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு 46 பேர் காயம்.
ஈராக் தலைநகரின் தென்கிழக்கு பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.இது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வறுபவர்களின் தங்குமிடமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தானது ஆக்ஸிஜன் தொட்டி வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து ஏற்பட்டவுடன் பல ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையை நோக்கி விரைந்து வந்து, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டதாகவும் ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஈராக் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் கூறுகையில் , நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு நியமிக்கப்பட்ட தரையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 120 பேரில் 90 பேர் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஈராக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,025,288 கடந்துள்ளது,இதுவரை 15,217 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது 897,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே அந்நாடு பொருளாதாரத் தடைகள், போர் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் நெருக்கடி தற்பொழுது மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…