#BigNews:பாக்தாத் கொரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டி வெடித்து 27 பேர் பலி

Default Image

ஈராக் தலைநகரின் தென்கிழக்கு பாக்தாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு 46 பேர் காயம்.

ஈராக் தலைநகரின் தென்கிழக்கு பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.இது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வறுபவர்களின்  தங்குமிடமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தானது ஆக்ஸிஜன் தொட்டி வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து ஏற்பட்டவுடன் பல ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையை நோக்கி விரைந்து வந்து, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டதாகவும் ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஈராக் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் கூறுகையில் , நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு நியமிக்கப்பட்ட தரையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 120 பேரில் 90 பேர் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஈராக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,025,288 கடந்துள்ளது,இதுவரை 15,217 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது 897,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஏற்கனவே அந்நாடு பொருளாதாரத் தடைகள், போர் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் நெருக்கடி தற்பொழுது மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்