எத்தியோப்பியாவில் விமான விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் பலி !!!!
- எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 என்ற விமானம் .
- எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபிபாவில் இருந்து கென்யா உள்ள நைரோபிவிற்கு 149 பயணிகள் , 8 ஊழியர்களுடன் நேற்று காலை புறப்பட்டது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 என்ற விமானம் எத்தியோப்பியாவில் உள்ள அடிஸ் அபிபாவில் இருந்து கென்யா உள்ள நைரோபிவிற்கு 149 பயணிகள் , 8 ஊழியர்களுடன் நேற்று காலை புறப்பட்டது.
புறப்பட்ட சில மணி நேரத்தில் விபத்துக்குள்ளானது. எத்தியோப்பியாவின் நேரப்படி காலை8.38மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் 8.44 மணிக்கு விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விலகியது.
விமானத்தில் பயணித்த 149 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தபட்டது.
இந்நிலையில் இந்த விமானத்தில் 33 நாட்டை சார்ந்தவர்கள் பயணம் செய்தனர். அதில் 4பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியானது.
விபத்து நடந்ததை அடுத்து 11மணியளவில் தீயணைப்புவீரர்களும், மீட்புக் குழுவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர் என இங்கு இருந்த கிராம மக்கள் கூறினார்.
மேலும் சில மதங்களுக்கு முன் இந்த விமானத்தில் ஒன்று இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 190 பயணிகள் இறந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது இரங்கல் தெரிவித்துள்ளார்.