அமெரிக்காவில் மட்டும் 110 திரையரங்குகளை தற்போதே கைப்பற்றிய அசுரன்!
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைபுலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. பரபரப்பான சண்டை காட்சிகள், நல்ல வசனங்களுடன் வெளியான இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படமானது அமெரிக்காவில் மட்டும் 110 திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.