அசுரனுக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் தேசிய விருதுகள் கிடைக்கும்! வேலையில்லா பட்டதாரி இயக்குனர் பெருமிதம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் படம் வெளியாக உள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். கலைபுலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் படத்தில் நடித்த மஞ்சு வாரியார், நடிகர் கருணாஸின் மகன் கென், ஆடுகளம் நரேன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்தனர் எனவும், படம் வேகமாக வளர்ந்தது என்பதால் இயக்குனர் மணிமாறன் (புகழ், உதயம் பட இயக்குனர்) சில காட்சிகளை ஷுட் செய்து தருவார் எனவும், தனது உதவி இயக்குனர்கள் தனக்கு பெரிதும் உதவினர் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கியவர்) கூறுகையில் அசுரன் படத்திற்கு கண்டிப்பாக அடுத்த வருடம் தேசிய விருது கிடைக்கும் என குறிப்பிட்டார். நடிகை மஞ்சு வாரியர் பேச்சுகளில், தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆனது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். என குறிப்பிட்டார்.
நடிகர் தனுஷும் இயக்குனரையும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் பாராட்டி பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025