“அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது”- பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது உலகளவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் களமிறங்கி, தடுப்பூசியை கண்டுபிடித்து, உலகளவில் தற்பொழுது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக கூறி, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தற்காலிகமாக தடை விதித்தும், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தடை விதித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவும் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று கூறினார். மேலும், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என உலகின் பல நாடுகளில் இந்த தடுப்பு மருந்து போடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.